திருக்குறள் -சிறப்புரை :976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. --- ௯௭௬
(பேணிக் கொள்வோம் என்னும்)
சான்றோராகிய பெரியோர்களைத் தமக்குத் துணையாக்கிக் கொள்வோம் என்னும் எண்ணம்
சிறுமைக் குணங்கள் கொண்டவர்களிடத்தே தோன்றுவதில்லை.
” பெரியார் பெருமை பெரிதே..”
–திணைமாலை நூற்றைம்பது.
சான்றோர்தம் பெருமைக்குணம் உண்மையில் கொண்டாடத் தக்கதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக