வியாழன், 23 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :973


திருக்குறள் -சிறப்புரை :973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். – ௯௭௩
(மேல் அல்லார்; மேல் அல்லர் ; கீழ் அல்லார் ; கீழ் அல்லவர்.)
பிறப்பொக்கும் மேன்மை அறியாதார் உயர்குடியில் பிறந்திருந்தாலும் அவர்கள் உயர்ந்தவர்கள் அல்லர் ; எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதும் மனம் உடையோர் தாழ்த்தப்பட்டவராயினும் அவர்கள் தாழ்ந்தோர் அல்லர்.
“ நல்லறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனிபெரிதே” –புறநானூறு.
நல்லறிவு உடையவர் மிக்க வறுமையுற்றார் ஆயினும் அவ்வறுமை பெருமைக்குரியது ; அதனை யாம் மிகவும் மகிழ்ந்து போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக