வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :955


திருக்குறள் -சிறப்புரை :955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப் பிரிதல் இன்று. --- ௯௫௫

(வழங்குவது உள் வீழ்ந்தக்)

இல்லாதவர்களுக்கு ஈத்துவக்கும் தன்மை உடைய பழம் பெருமை வாய்ந்த நற்குடியில் பிறந்தார் வறுமையுற்று வருந்தும்பொழுதும் தம் குடிப்பெருமை விளங்க, ஒருபோதும் பண்புடைமையினின்று நீங்கார்.  

(’பழங்குடி,’ என்றதற்குப் பொருள் கூறும் பரிமேலழகர், ”தொன்றுதொட்டு வருதல், சேர, சோழ பாண்டியர் என்றார்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்.” என்றார்.)

“நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே.” –புறநானூறு.

ஈர்ந்தூர் கிழான், நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வ வளம் உடையவன் அல்லன் ; இரந்தோர்க்கு இல்லையென மறுக்கும் சிறுமையும் உடையவன் அல்லன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக